1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 9 ஜூன் 2017 (06:06 IST)

கரண்ட் கட் ஆனதால் மின்சார ஊழியர்களை துப்பாக்கியால் சுட்ட நீதிபதி

மின்சார தடை என்பது இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து மாநிலங்களுக்குமான பிரச்சனை. அதிலும் கோடை வெயில் நேரத்டில் கரண்ட் கட் ஆனால் பொதுமக்கள் கொலைவெறியை அடைகின்றனர். இந்த நிலையில் டெல்லி அருகே கரண்ட் கட் ஆனதால் கடுப்பான நீதிபதி ஒருவர் துப்பாக்கியை எடுத்து மின்சார ஊழியர்களை நோக்கி சுட்டதால் பெரும் பரபரப்ப்பு ஏற்பட்டுள்ளது.



 


டெல்லியில் உள்ள குர்கான் என்ற பகுதியை சேர்ந்த ராகவன் என்பவர் நீதிபதியாக இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றுள்ளார். இவரது வீடு இருக்கும் பகுதியில் அடிக்கடி பராமரிப்பு என்ற பெயரில் கரண்ட் கட் ஆகிக்கொண்டே இருந்தது.

இந்த நிலையில் நேற்று மீண்டும் கரண்ட் கட் ஆனது. வீட்டை விட்டு வெளியே வந்த நீதிபதி ராகவ், பராமரிப்பு பணி செய்து கொண்டிருந்த மின்வாரிய ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால் கடுப்பான நீதிபதி உடனே வீட்டிற்குள் சென்று துப்பாக்கியை எடுத்து ஊழியர்கள் மீது சரமாரியாக சுட்டார். நல்லவேளை அவருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி இல்லாததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை

இதுகுறித்து மின்வாரிய ஊழியர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் ராகவ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.