செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 7 மே 2018 (15:53 IST)

சிவில் சர்வீஸ் தேர்வில் 55.6% பெற்றவர் முதலிடம்!

சிவில் சர்வீஸ் கமிஷன் சார்பில் நடத்தப்படும் UPSC தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.


 
UPSC 2017ஆம் ஆண்டு நடந்த தேர்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில் அனுதீப் என்பவர் 55.6% மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். 28 வயதான அனுதீப் இந்திய வருவாய் சேவை அலுவலராக பணியாற்றி வந்துள்ளார்.
 
1750 மார்க் கொண்ட எழுத்து தேர்வில் 1126 மார்க் பெற்றுள்ளார். அதேபோன்று 275 மார்க் கொண்ட நேர்முக தேர்வில் 176 மார்க் பெற்றுள்ளார். இராண்டாம் இடம் பிடித்த அனு குமாரி 55.5% மதிப்பெண் பெற்றுள்ளார். மூன்றாம் இடம் பிடித்துள்ள சச்சின் குப்தா 55.4% மதிப்பெண் பெற்றுள்ளார்.  
 
2016ஆம் நடந்த தேர்வில் 55.3% மதிப்பெண் பெற்றவர் முதலிடம் பிடித்தார். 2015ஆம் ஆண்டு நடந்த தேர்வில் 52.49% மதிப்பெண் பெற்றவர் முதலிடம் பிடித்தார். இந்த மதிப்பெண்கள் சிவில் சர்வீஸ் தேர்வு எவ்வளவு கடிணமானது என்பதை தெளிவாக காட்டுகிறது.