1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 1 மார்ச் 2025 (17:36 IST)

இந்தியை திணிக்க மாட்டேன் என்று அமித்ஷா இந்தியில்தான் சொல்கிறார்: எஸ்வி சேகர்

இந்தியை திணிக்க மாட்டேன் என்று அமித்ஷா தமிழகத்தில் இந்தியில் தான் சொல்லிவிட்டு சென்று உள்ளார் என்று நடிகர் எஸ்.வி. சேகர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வரும் நிலையில், தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழி கொள்கை மட்டுமே இருக்கும் என்று ஆளும் திமுக அரசு உறுதிபடக் கூறியுள்ளது.
 
இந்த நிலையில், இந்தி திணிப்பு குறித்து நடிகர் எஸ்.வி. சேகர் கூறிய போது, இந்தியை திணிக்க மாட்டேன்" என்று அமித்ஷா இந்தியில் தான் சொல்லிவிட்டு சென்றார். தமிழகத்தை பொறுத்தவரை மும்மொழிக் கொள்கை தேவையற்றது. அவரவருக்கு பிடித்த மொழியை அவரவர் படிக்கலாம்.
 
"இந்தி  எதிர்ப்பு போராட்டத்தில் நானும் கலந்து கொண்டேன். அப்போது வீராணம் பைப் வழியாக தப்பித்து வீடு வந்து சேர்ந்தேன்," என்று அவர் கூறியுள்ளார்.
 
சமீப காலமாக, எஸ்.வி. சேகர் திமுக ஆதரவு கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், இந்த விஷயத்திலும் அவர் "இந்தி தமிழகத்திற்கு தேவையில்லை" என்றும் "இருமொழி கொள்கை தமிழகத்திற்கு போதும்" என்றும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran