புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : புதன், 22 ஏப்ரல் 2020 (17:10 IST)

மருத்துவர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் வரை சிறை ! அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

கொரோனா தடுப்பு பணியில் ஈடுப்பட்டுள்ள மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், நாட்டில் சில பகுதியில் மருத்துவர்கள் தாக்கப்படும் சம்பவங்களும், சுகாதாரப் பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் நாட்டில் சில இடங்களில் நடந்தது.

இந்த நிலையில், கொரொனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை பாதுகாக்க மத்திய அரசு தற்போது அவசர சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதன்படி , மத்திய அமைசர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.

மேலும், ஜவடேகர் கூறியுள்ளதாவது, மருத்துவர்கள் மீது தாக்கல் நடத்தப்படுவதை அரசு பொறுத்துக்கொள்ளாது. இந்தக் குற்றத்தில் கைது செய்யப்படுகிறவர்களுக்கு ஜாமீன் கிடையாது.இதுகுறித்து 30 நாட்களில் விசாரணை நடத்தி முடிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்தச் சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குப் பின் அமலுக்கு வரும் என தெரிவித்துள்ளார்.