1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. UP minister resigns and joined SJP

உபி அமைச்சரவையில் இருந்து மேலும் ஒரு அமைச்சர் ராஜினாமா: சிக்கலில் பாஜக!

உத்தரபிரதேசம்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் ஆளும் கட்சியான பாஜகவிலிருந்து அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் விலகி எதிர்க்கட்சியான சமாஜ்வாடி ஜனதா கட்சியில் இணைந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஏற்கனவே பாஜக அமைச்சர் ஒருவரும் 4 எம்எல்ஏக்கள் விலகி சமாஜ்வாதி ஜனதா கட்சியில் சேர்ந்துள்ளனர். இந்த நிலையில் இன்று மேலும் ஒரு அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் 
 
உத்தரப்பிரதேச மாநிலத்தின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்த தாரா சிங் சவுகான் என்பவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனை அடுத்து அவர் சமாஜ்வாதி ஜனதா கட்சியில் சேருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
ஏற்கனவே அவர் அகிலேஷ் யாதவ் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
 
 
அடுத்த கட்டுரையில்
சிறையில் இருந்து விடுதலை ஆனார் ராஜேந்திர பாலாஜி!