மேலும் ஒரு மாநிலத்தில் இரவுநேர ஊரடங்கு? பொதுமக்கள் அதிர்ச்சி
இந்தியாவிலும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது என்பதும் நாடு முழுவதும் தற்போது 400 க்கும் அதிகமான ஒமிக்ரான் வைரஸ் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையிலும் ஒமிக்ரான் வைரசை கட்டுப்படுத்த ஏற்கனவே மத்திய பிரதேசம் உத்தரப்பிரதேசம் ஒடிசா ஆகிய மாநிலங்களில் புதிய கட்டுப்பாடுகள் மற்றும் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஜனவரி இரண்டாம் தேதி வரை மகாராஷ்டிராவில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை, பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் திரையரங்குகள், உடற்பயிற்சி கூடம், ஸ்பாக்களில் 50 சதவீத பேருக்கு மட்டும் அனுமதி என மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது. ஒமிக்ரான் பாதிப்பால் படிப்படியாக ஒவ்வொரு மாநிலத்திலும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டு வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.