உ.பி. முதல்வரை பிரச்சாரத்தில் இருந்து துரத்தி அடித்த விமர்சகர்கள்..

Last Updated: சனி, 5 மே 2018 (12:05 IST)
கர்நாடகாவில் வரும் 12 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக பிரச்சாரங்கள் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கர்நாடகவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்தார். 
 
இதனால் இவர் பல விமர்சனங்கள் குவிந்தது. இதனால் தேர்தல் பிரச்சாரத்தை பாதியிலேயே விட்டு உ.பி. புறப்பட்டார். உ.பி.யில் பலத்த காற்றுடன், தூசுப்புயல் ஏற்பட்டு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. 
 
இதனால், பல வீடுகள் பல இடிந்தன, மின் கம்பங்கள் சாலையில் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த தூசுப்புயலில் சிக்கி 73 பேர் பலியானார்கள். தனது மாநிலத்தில் இப்படி ஒரு சூழ்நிலை இருக்கையில், மற்ற மாநிலத்தின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதற்கு இவர் மீது கண்டனங்கள் குவிந்தன. 
பொது மக்கள் மட்டுமின்றி அரசியல் கட்சி தலைவர்கல் பலரும், உ.பி. முதல்வர் மீது பல விமர்சனங்களை வைத்தனர். கர்நாட முதல்வர் சித்தராமையா, அனைவரும் மன்னிக்கவும். உபி மக்களே உங்களின் முதல்வரின் பணி இப்போது கர்நாடகத்துக்கு தேவைப்படுகிறது என கலாய்த்து மேலும் சிக்கலை ஏற்படுத்தினார். 
 
தொடர் விமர்சனம் காரணமாக கர்நாடகவில் இருந்து உ.பி. முதல்வர் ஆதித்யநாத் புறப்பட்டார். அவர் திட்டத்தின்படி இன்று மாலை வரை பிரச்சாரம் செய்வதாய் இருந்தது. ஆனால், விமர்சனங்களை தாங்க முடியமால், கர்நாடகாவில் இருந்து பாதியிலேயே புறப்பட்டுவிட்டார்.


இதில் மேலும் படிக்கவும் :