1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 28 ஜனவரி 2023 (15:52 IST)

சனாதன தர்மம் இந்தியாவின் தேசிய மதம்: முதலமைச்சர் பேச்சு

sanatana
சனாதன தர்மம் இந்தியாவின் தேசிய மதம்: முதலமைச்சர் பேச்சு
சனாதன தர்மம் இந்தியாவின் தேசிய மதம் என உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். 
 
ராஜஸ்தானில் நடந்த கோவில் குடமுழக்கு திருவிழாவில் கலந்து கொண்ட உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசியபோது இந்தியாவில் சனாதன தர்மம் தேசிய மதமாக உள்ளது என்றும் ஒவ்வொரு குடிமகனும் அதனை மதிக்க வேண்டும் என்றும் கூறினார். 
 
500 ஆண்டுகளுக்கு பின்னர் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலை பிரதமர் மோடி மீட்டார் என்றும் தற்போது கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
 
நாட்டில் உள்ள சேதப்படுத்தப்பட்டு கிடக்கும் மத தளங்களை மீட்பதற்காக மக்கள் ஈடுபட வேண்டும் என்றும் அவருக்கு ஏற்றுக் கொண்டார்
 
Edited by Mahendran