புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: வெள்ளி, 1 நவம்பர் 2019 (14:25 IST)

விமான நிலையத்தில் ஆர் டி எக்ஸ் பாம்…

டெல்லி விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பை ஒன்றில் ஆர் டி எக்ஸ் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியிலுள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக ஒரு பை இருப்பதாக அதிகாலை ஒரு மணி அளவில் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து போலீஸார் மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த பையில் ஆர் டி எக்ஸ்க்கான வெடி மருந்துகள் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டன. இதனால் விமான நிலையத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. அதன் பின்பு சிஐஎஸ்எஃப் உதவியுடன் பை அகற்றப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. மேலும் அந்த வெடி மருந்து சோதனைக்கு உட்படுத்தப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது