திங்கள், 18 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 7 நவம்பர் 2022 (14:33 IST)

உச்சநீதிமன்ற தீர்ப்பு சமூகநீதி போராட்டத்தில் ஒரு பின்னடைவு: முதல்வர் ஸ்டாலின்

CM Stalin
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்றத்தின் போராட்டம் நூறாண்டு கால சமூக நீதி போராட்டத்திற்கான ஒரு பின்னடைவு என்று தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
பொருளாதார ரீதியாக பின் தங்கிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு அளிப்பதற்காக பாரதிய ஜனதா கட்சி கொண்டுவந்த இட ஒதுக்கீடு முறை சமூகத்திற்கும் சமத்துவத்திற்கும் எதிராக அமையும் வகையில் திமுக சட்டப் போராட்டத்தை முன்னெடுத்தது 
 
இந்த வழக்கில் இன்று வெளியாகியுள்ள தீர்ப்பு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான 100 ஆண்டுகால போராட்டத்தில் ஒரு பின்னடைவு என்றே கருத வேண்டியுள்ளது 
 
தீர்ப்பினை முழுமையாக ஆராய்ந்து சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்து சமூகநீதிக்கு எதிரான முன்னேறி வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டுக்கு எதிராக நமது போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்வோம் இவ்வாறு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran