புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 5 பிப்ரவரி 2020 (10:53 IST)

இப்போ புல்லட் ரயில் ரொம்ப அவசியமா? – பிரதமர் மோடிக்கு உத்தவ் தாக்கரே கேள்வி!

மும்பை – அகமதாபாத் புல்லட் ரயில் சேவை அவசியமா என பிரதமர் மோடிக்கு உத்தவ் தாக்கரே கேள்வியெழுப்பியுள்ளார்.

பிரதமர் மோடியின் கனவு திட்டம் என கூறப்படும் மும்பை – அகமதாபாத் இடையேயான புல்லட் ரயில் சேவைக்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஜப்பான் நாட்டுடன் இணைந்து அமைக்கப்படும் இந்த புல்லட் ரயில் சேவை பணிகள் 2022ம் ஆண்டு முடிவடையும் என கூறப்படுகிறது. நாட்டின் 75வது சுதந்திர தினத்தில் இதன் சேவையை தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் இந்த திட்டம் குறித்து மறு ஆய்வு செய்யக்கோரி மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் புல்லட் ரயில் பாதை பிரதமரின் கனவாக இருக்கலாம். தூங்கி எழுந்தால் கனவு கலைந்துவிடும். இந்த புல்லட் ரயில் சேவையால் யாருக்கு என்ன பயன்? என கேள்வியெழுப்பி சிவசேனா நாளிதழான சாம்னாவில் கேள்வியெழுப்பியுள்ளார்.