1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (12:47 IST)

பைக்கில் வந்தவருக்கு வழிவிட்ட சிங்கம்! – கேஷுவலாக செல்லும் வீடியோ!

Lion in the Gir Park

குஜராத் மாநிலத்தில் சாலையில் பைக்கில் வந்தவருக்கு சிங்கம் ஒன்று வழிவிட்டு செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

காட்டு விலங்குகள் என்றாலே மக்களுக்கு நடுக்கம் ஏற்பட அவை பெரும் வேட்டையாடியாகவும், அதிக ஆற்றல் கொண்டவையாகவும் இருப்பது பெரும் காரணம். ஆனால் சில சமயங்களில் காட்டு விலங்குகள் மூர்க்கத்தனத்தை தாண்டிய சில சம்பவங்களை செய்து மனிதர்களை வியக்க வைத்து விடுகின்றன.

குஜராத் கிர் தேசிய பூங்கா சிங்கங்களின் சரணாலயமாக செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் கிர் காட்டுப்பகுதியில் சுற்றுலா சென்ற சிலர் பெண் சிங்கம் ஒன்று தன் குட்டிகளோடு மனிதர்கள் செல்லும் ஒத்தையடி பாதை ஒன்றில் நடந்து சென்று கொண்டிருக்கிறது. அந்த பாதை காட்டுக்கு அருகில் உள்ள கிராமத்தில் உள்ளவர்கள் சென்று வர உபயோகிக்கும் பாதை ஆகும். சிங்கத்தின் எதிரே பைக்கில் பக்கத்து கிராமத்தை சேர்ந்தவர் வந்திருக்கிறார். சிங்கத்தை பார்த்ததும் அவர் அப்படியே பைக்கை நிறுத்தி விட்டார்.

அவரை எதுவுமே செய்யாமல் சிங்கம் தன் குட்டிகளோடு மீண்டும் சாலைக்கு பக்கவாட்டில் இருந்த காட்டுப்பகுதிக்குள் மிக சாதாரணமாக சென்று விட்டது. பைக்கில் வந்தவருக்கு மிக நெருக்கத்திலேயே இருந்த போதும் சிங்கம் அவரை தாக்காமல் சென்றது பலரை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.