1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (13:21 IST)

வங்க தேசத்தவங்க ஒழுங்கா போயிடுங்க..இல்லன்னா கபர்தார்! – மும்பையில் சர்ச்சைக்குரிய போஸ்டர்!

வங்க தேசத்தை சேர்ந்தவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என எச்சரிக்கை விடுக்கும் வகையில் மும்பையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடியுரிமை சட்ட திருத்தம் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டது தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் மும்பையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மராட்டிய நவ நிர்மாண் சேனா என்ற அமைப்பு இந்தியாவில் குடியேறியவர்களுக்கு எதிராக பிப்ரவரி 9ம் தேதி பேரணி நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. இதற்காக ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் ”வங்காள தேசத்தை சேர்ந்தவர்கள் நீங்களாக வெளியேறி விடுங்கள். இல்லையெனில் நீங்க மராட்டிய நவ நிர்மாண் பாணியில் வெளியேற்றப்படுவீர்கள்” என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

மும்பையின் பல பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.