பணியின் போது துப்புரவு பணியாளர் இறந்தால் ஒரு கோடி; ஆம் ஆத்மி தேர்தல் அறிக்கை
துப்புரவு பணியாளர் பணியின் போது இறந்தால் அவரது குடும்பத்திற்கு ஒரு கோடி வழங்கப்படும் என ஆம் ஆத்மி தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.
டெல்லியில் வருகிற 8 ஆம் தேதி, சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே இந்த தேர்தலில் மும்முனைப்போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில் சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை இன்று ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டது. அதில் துப்புரவு பணியாளர்கள் பணியில் இருக்கும்போது இறந்தால் அவரது குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அதில் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த டெல்லி சட்டசபை தேர்தலில் 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி 67 தொகுதிகள் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.