காதலுக்காக பெண் எடுத்த முடிவு – கௌரவத்திற்காக தாய் எடுத்த முடிவு !
மகாராஷ்ட்ர மாநிலத்தில் தன்னுடைய காதலனோடு வாழ வீட்டை விட்டு வெளியேற முடிவெடுத்த மகளை தாயே கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
மகாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்தவர் 40 வயதாகும் வகேலா என்ற பெண். அவரது மகளான நிர்மலாவோடு வசித்து வந்துள்ளார். நிர்மலாவுக்கு வயது 23 ஆகிறது. அவர் அப்பகுதியில் உள்ள ஒரு இளைஞரை நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார். ஆனால் அதற்கு அவரது தாய் வகேலா மகளின் காதலுக்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.
தாயின் சம்மதத்துக்காகக் காத்திருந்த நிர்மலா அது நடக்காது எனத் தெரிந்தவுடன் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளார். ஆனால் அவள் வெளியே சென்றால் குடும்ப கௌரவம் போய்விடும் என நினைத்த தாயார் அவரை வெளியே செல்ல விடாமல் தடுத்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதம் முற்றி ஒரு கட்டத்தில் மகளை துப்பட்டாவால் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். மகளைக் கொன்ற பின் அருகில் உள்ள காவல்நிலையத்தில் சென்று வகேலா சரணடைந்துள்ளார். பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை சம்மந்தமாக போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.