ஞாயிறு, 1 பிப்ரவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 15 மே 2022 (15:17 IST)

பாஜகவில் சேர்ந்தால் தாவூத் இப்ராஹிம் கூட புனிதர்தான்! – உத்தவ் தாக்கரே தாக்கு!

Uddav
தேடப்படும் குற்றவாளியான தாவூத் இப்ராஹி பாஜகவில் இருந்திருந்தால், அவரை புனிதர் ஆக்கி இருப்பார்கள் என மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்டிருந்தாலும் பின்னர் கூட்டணியிலிருந்து விலகி பிற கட்சிகளின் உதவியுடன் உத்தவ் தாக்க்ரே ஆட்சியமைத்தார்.

அப்போது முதலாக பாஜக, சிவசேனா இடையே தொடர்ந்து வாக்குவாதங்கள் நிலவி வருகின்றன. சமீபத்தில் பேசிய முதல்வர் உத்தவ் தாக்கரே “தற்போது தாவூத் இப்ராஹிம் மற்றும் அவனது கூட்டாளிகளை அரசு தேடி கொண்டிருக்கிறது. ஆனால் ஒருவேளை அவர் பாஜகவில் இணைந்துவிட்டால் ஒரே நாள் இரவில் அவரை புனிதராக மட்டுமல்ல, அமைச்சராகவும் ஆக்கி விடுவார்கள். பாரதிய ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்து 25 ஆண்டுகளை சிவசேனா வீணடித்து விட்டது” என்று பேசியுள்ளார்.