1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : வெள்ளி, 13 மே 2022 (12:27 IST)

70 ஆண்டுகளாக காங்கிரசுக்கு இருந்த வியாதி திமுகவுக்கு வந்திருக்கிறது: அண்ணாமலை

Annamalai
70 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சிக்கு இருந்த வியாதி தற்போது திமுகவுக்கு வந்திருக்கிறது என்று பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்
 
குடும்ப அரசியல் செய்யும் தலைவர்களுக்கு தான் தங்களுடைய தாத்தாவின் பெயர் தந்தையின் பெயர் ஆகியவற்றை வைக்கும் மனவியாதி இருக்கும்
 
சாலைகளுக்கு தனது தந்தையின் பெயரை வைப்பதும், தாத்தாவின் பெயரை வைப்பதும்  ஒரு மனவியாதி தான். இந்த வியாதி குடும்ப அரசியலை செய்யும் தலைவர்களுக்குதான் இருக்கும் 
 
70 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சிக்கு எந்த இந்த வியாதி இருந்த நிலையில் தற்போது இந்த வியாதி திமுக வந்திருக்கிறது. 2024 ஆம் ஆண்டு தேர்தல் கோபாலபுரம் குடும்பத்தின் கடைசி தேர்தலாக இருக்கும் என அண்ணாமலை பேசியுள்ளார். அவரது இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது