திருப்பி அனுப்பப்பட்ட 2 பெண்கள்: சபரிமலையில் இன்றும் பதட்டம்

Last Modified சனி, 19 ஜனவரி 2019 (09:57 IST)
சபரிமலை ஐயப்பனை தரிசிக்க அனைத்து வயது பெண்களுக்கும் உரிமை உண்டு என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தாலும், அந்த தீர்ப்பை சபரிமலை ஐயப்பன் பக்தர்கள் ஏற்று கொள்ளாததால் சபரிமலைக்கு ஐயப்பனை தரிசிக்க வரும் பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். இருப்பினும் ஒருசில பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் ஐயப்பனை தரிசனம் செய்ததாக தகவல்கள் வந்துள்ளது.

இந்த நிலையில் இன்று சபரிமலை சென்ற 2 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சபரிமலை அருகில் உள்ள நிலக்கல்லில் இருவரும் தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது


கேரளாவைச் சேர்ந்த ஷனிலா, ரேஷ்மா ஆகிய இருவரும் இன்று சபரிமலைக்கு சென்றதாகவும், அவர்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தியதால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டதாகவும், இரண்டு பெண்களுக்கு எதிரான போராட்டம் முற்றியதால் இருவரையும் போலீஸார் திருப்பி அனுப்பியதாகவும் அங்கிருந்து வெளிவந்துள்ள செய்திகள் கூறுகின்றன.


இதில் மேலும் படிக்கவும் :