திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 18 பிப்ரவரி 2023 (11:22 IST)

கருத்தடை சாதனங்களுக்கு தடை: ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் புதிய உத்தரவு..!

Taliban
ஆப்கானிஸ்தானில் ஏற்கனவே பெண்களுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது ஆப்கானிஸ்தான் நாட்டில் கருத்தடை உபகரணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தாலிபான்கள் தெரிவித்துள்ளனர். 
 
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அங்கு பெண்களுக்கான உரிமை மறுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள இரண்டு முக்கிய நகரங்களில் கருத்தடை சாதனங்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. 
 
கருத்தடை மாத்திரைகளை இருப்பு வைத்திருக்கக் கூடாது என்று உத்தரவிட்டு உள்ள தாலிபான்கள் மருந்தகங்களில் அப்போது சோதனையும் நடைபெறும் என்றும் சோதனையின் போது கருத்தடை மாத்திரைகள் மற்றும் சாதனங்கள் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்
 
தற்போது காபூல் மற்றும் மஸார் - இ ஷெரிஃப்  ஆகிய இரண்டு நகரங்களில் மட்டும் இந்த தடை அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் விரைவில் நாடு முழுவதும் தடை விரிவுபடுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran