அதிர்ச்சி தகவல் : ஐஐடி, ஐஐஎம்-இல் படிக்க இயலாமல் வெளியேறும் மாணவர்கள்
ஆண்டுக்கு 1000 மாணவர்கள் படிக்க முடியாமல் ஐஐடிகளிலிருந்தும் ஐஐஎம்களிலிருந்தும் வெளியேறுகின்றனர் என்று அந்நிறுவனத்தின் ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.
நாட்டிலேயே உயர் கல்வி நிறுவனங்களான ஐஐடி மற்றும் ஐஐஎம்களில் சேருவதற்கு தேசிய அளவில் நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. கடுமையான பயிற்சி பெற்றவர்களே இத்தேர்வுகளில் வெற்றி பெற்று இந்நிறுவனங்களில் படிக்க முடியும்.
ஆனால் அப்படி இந்த உயர் கல்வி நிறுவனங்களில் நுழையும் மாணவர்கள் படிக்க முடியாமல் பாதியிலேயே வெளியேறி விடுகின்றனர் என்று அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதுதொடர்பாக ஐஐடி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், “ஆண்டுதோறும் 1000 மாணவர்கள் வீதம் இதுவரை கடந்த இரண்டு ஆண்டுகளில் 2000 பேர் வெளியேறியுள்ளனர். புதுடெல்லியில் கடந்த 2014 மற்றும் 2016இல் 699 மாணவர்களும் கராக்பூரில் 544 பேரும், மும்பையில் 143 பேரும் வெளியேறியுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ‘கிராமப்புறத்திலிருந்து வரும் மாணவர்கள் குறிப்பாக தலித் மாணவர்கள் சரியாக வழிகாட்டப்படாமல் கல்விக்கான கவுன்சிலிங்கும் அளிக்கப்படாமல் மன உளைச்சலுக்கு ஆளாகுகிறார்கள்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.