இந்தியாவில் முதல் ஒமைக்ரன் பலி: ஒரே நாளில் இருவர் இறந்ததால் அதிர்ச்சி!
கடந்த சில நாட்களாக இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் ஒமைக்ரன் வைரஸ் பரவி வந்தாலும் இதுவரை ஒமைக்ரன் வைரசால் உயிர்ப்பலி இல்லாமல் இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் இரண்டு பேருர் ஒமைக்ரன் வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 52 வயதான ஒருவர் ஒமைக்ரன் வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் திடீரென உயிரிழந்தார். அவர் நைஜீரியாவில் இருந்து திரும்பி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
அதேபோல் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 73 வயது நபர் ஒருவர் ஒமைக்ரன் வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்த நிலையில் திடீரென அவர் வீடு திரும்பியபோது உயிரிழந்ததாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஒமைக்ரன் வைரஸ்க்கு ஒரே நாளில் இரண்டு உயிர்கள் பலியாகி உள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.