1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 17 ஆகஸ்ட் 2017 (19:16 IST)

உப்புமாவில் கடத்தல்: பிடிபட்ட பலே கில்லாடிகள்!!

புனே விமான நிலையத்தில் உப்புமாவில் அமெரிக்க டாலர்கள் மற்றும் யூரோக்களை கடத்தி சென்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.


 
 
துபாய் செல்லும் இரு பயணிகள் புனே விமான நிலையத்தில் சோதனை செய்யப்பட்டனர். அவர்களிடம் அதிகளவிலான உப்புமா இருந்தது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
 
பின்னர், இரு பயணிகளை சோதனை செய்தபோது ஒரு ஹாட் கேஸ் நிறைய உப்புமாவில் 86,000 அமெரிக்க டாலர் மற்றும் 15,000 யூரோ மறைத்து கடத்தி இருப்பது அதிர்ச்சியை தந்தது. இருவரையும் விசாரணைக்காக சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.