1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: திங்கள், 14 ஆகஸ்ட் 2017 (13:53 IST)

என் மகளை கடத்த திட்டமிட்டனர் - கமல்ஹாசன் பகீர் தகவல்

தன்னுடைய மகளை கடத்த சிலர் திட்டமிட்டதாக நடிகர் கமல்ஹாசன் அதிர்ச்சி தரும் தகவலை கூறியுள்ளார். 


 

 
சமீபத்தில் ஒரு ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த அவர், தனக்கு பிடித்த 70 திரைப்படங்களின் பட்டியலை கூறினார். அதில், அவர் நடித்த ‘மகாநதி’யும் ஒன்று எனக்கூறிய அவர், தனது சொந்த வாழ்வில் சந்தித்த ஒரு பிரச்சனை காரணமாக அந்த கதையை எழுதினேன் எனக் கூறியுள்ளார். அது பற்றி அவர் கூறியதாவது:
 
“என்னை எந்த விவகாரம் மகாநதி கதையை எழுத வைத்தது என இதுநாள் வரை நான் யாரிடமும் கூறியதில்லை. இப்போது என் மகள்கள் வளர்ந்துவிட்டனர். எனவே இப்போது கூறுகிறேன்.
 
என் வீட்டில் வேலை செய்த சிலர், என் மகளை கடத்தி என்னிடம் பணம் பறிக்க திட்டம் போட்டனர். அதற்கான ஒத்திகையும் அவர் செய்துள்ளனர். ஆனால், அதற்கு முன்பே அவர்களின் திட்டத்தை நான் அறிந்துகொண்டேன்.  அதனால் நான் கோபம் அடைந்தேன். பதற்றம் என்னை தொற்றிக்கொண்டது. என் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக நான் கொலை செய்யவும் தயாராக இருந்தேன். அதன்பின் என் கோபத்தை நான் கட்டுப்படுத்திக்கொண்டேன்.
 
அந்த சூழ்நிலையில்தான் மகாநதி கதையை நான் எழுதினேன். என் குழந்தைகளுக்கு நேர்ந்தது போல் யாருக்கேனும் எதுவும் நடக்கலாம் என்கிற அச்சமும் அதற்கு காரணமாக இருந்திருக்கலாம்” என அவர் கூறினார்.
 
ஆனால், தனது இரண்டு பெண் குழந்தைகளில் எந்த குழந்தை என எதுவும் அவர் குறிப்பிடவில்லை.