1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 20 செப்டம்பர் 2021 (08:56 IST)

பஞ்சாப் மாநிலத்தில் இரண்டு துணை முதலமைச்சர்கள்: காங்கிரஸ் அறிவிப்பு!

பஞ்சாப் மாநிலத்தில் இரண்டு துணை முதலமைச்சர்கள்: காங்கிரஸ் அறிவிப்பு!
பஞ்சாப் மாநில முதலமைச்சராக இருந்த அமரீந்தர் சிங் மீது கடந்த சில மாதங்களாக அதிருப்தி ஏற்பட்டு இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார் இதனை அடுத்து புதிய முதல்வராக சரண்ஜித்சிங் சன்னி என்பவர் பஞ்சாபின் முதல்வராக இன்று பதவி ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டது 
 
இந்த நிலையில் திடீர் திருப்பமாக பஞ்சாப் மாநிலத்தில் இரண்டு பேருக்கு துணை முதலமைச்சர் பதவி அளிக்கப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் துணை முதலமைச்சர் பதவி யார் யாருக்கு என்பதை இன்னும் காங்கிரஸ் அறிவிக்கவில்லை 
 
இன்று காலை 11 மணிக்கு பஞ்சாப் மாநில முதல் அமைச்சராக சரண்ஜித்சிங் சன்னி அவர்கள் பதவி ஏற்கும் நிலையில் உள்ள நிலையில் பஞ்சாப் மாநில துணை முதலமைச்சர் யார் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக நவ்ஜோத் சிங் சித்து அவர்கள் துணை முதலமைச்சராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது