1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Amrinder singh to resign Punjab CM

பஞ்சாப் முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்யும் அம்ரிந்தர் சிங்!

பஞ்சாப்
பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவர்கள் பிறப்பித்துள்ளார். பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங் அவர்களுக்கும், சித்து அவர்களுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனை அடுத்து சித்து அம்ரீந்தர் சிங் எதிர்ப்பையும் மீறி நவ்ஜோத் சிங் சித்து பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் இப்போது கட்சியில் அம்ரீந்தர் சிங்குக்கு எதிராக எம் எல் ஏக்களை திரட்டி வருகிறாராம் சித்து. இந்நிலையில் கட்சியில் தனக்கு ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் இன்று மாலை கட்சி நிர்வாகிகள் கூடும் கூட்டம் நடக்க உள்ளது. அதற்கு முன்னதாகவே அம்ரீந்தர் சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது.
 
அடுத்த கட்டுரையில்
60 வயது பெண்ணைக் கொன்று சடலத்துடன் உடலுறவுக் கொண்ட இளைஞன்!