வியாழன், 8 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 26 மே 2020 (22:46 IST)

டெல்லியில் இரண்டு பகுதியில் பயங்கர தீ விபத்து

டெல்லியில் இரண்டு பகுதியில் பயங்கர தீ விபத்து
டெல்லி துக்ளாபாத் பகுதியில் உள்ள ஒரு குடிசைப் பகுதியில் இன்றூ தீ விபத்து ஏற்பட்டது. அதனால் அப்பகுதியில் உள்ள சுமார் 250க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசமானது என தகவல் வெளியாகிறது.

ஆனால், அங்குள்ள பாதிப்பு விவரங்கள் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. மேலும் இதுகுறித்து தகவல் வெளியானதும்   28 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைத்தனர்.

அதேபோல் டெல்லியில் கேஷவ்புரம் பகுதியில் உள்ள செருப்பு தயாரிப்பு தொழிற்சாலையிலும் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியானது.இங்கும் சுமார் 15க்கும் மேற்பட்ட வாகனங்கள் சம்பவ இடத்திற்குச் சென்று தீயை அணைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.