தொடர்புடைய செய்திகள்
- நெருக்கடியை தவிர்க்க ராஜினாமா? பலம் இழக்கும் காங்கிரஸ்!
- மக்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு பின்னர் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்: பாஜக பிரமுகர்
- காங்கிரஸ் டோட்டலி அப்செட்! கேட்டும் கொடுக்காத ஸ்டாலின்...
- எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின்? ஆதரவு கொடுக்க ரெடியான திருநாவுக்கரசர்: கடுப்பில் காங்கிரஸார்!!
- எனது பேச்சுக்கு மதிப்பில்லை: சித்தராமையா குற்றச்சாட்டு
காங்கிரஸில் ராஜினாமா படலம்: ஆட்சியை தக்க வைக்க திண்டாட்டம்?
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்துள்ளதால், அம்மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்க சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகிறது. இந்த ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆம், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
விஜயாநகர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஆனந்த் சிங் மற்றும் ரமேஷ் ஜர்கிஹோலி ராஜினாமா செய்துள்ளனர். 2 எம்எல்ஏக்கள் பதவி விலகியதால் கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சியின் பலம் 77 ஆக குறைந்துள்ளது.
இது ஆட்சிக்கு கடும் நெருக்கடி தரும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. சித்தராமையா இது குறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களுடன் ஆலோசனையில் ஈடுப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
