1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 22 ஏப்ரல் 2020 (08:18 IST)

கொரோனாவுக்காக புதிய பக்கம் ஆரம்பித்த டுவிட்டர்: மத்திய அமைச்சர் தகவல்

கொரோனாவுக்காக புதிய பக்கம் ஆரம்பித்த டுவிட்டர்
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்திய மக்களிடையே கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கொரோனா வைரஸ் குறித்த சந்தேகங்களை தீர்க்கும் வகையிலும் டுவிட்டருடன் இணைந்து மத்திய அரசு ஒரு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது 
 
இதன்படி ’டுவிட்டர் இந்தியாவுடன் இணைந்து மத்திய அரசு ஒரு டுவிட்டர் பக்கத்தை ஆரம்பித்துள்ளது. இந்த பக்கத்தில் கொரோனா குறித்த கேள்விகளையும் சந்தேகங்களையும் பொதுமக்கள் கேட்டால் உடனுக்குடன் அவர்களுக்கு பதில் அளித்து அவர்களது சந்தேகங்கள் தீர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மத்திய அரசின் இந்த முயற்சிக்கு ’டுவிட்டர் இந்தியா’ உதவி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த டுவிட்டர் பக்கம் குறித்த விபரங்களை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
தனிச்சிறப்புமிக்க வகையில் இந்த டுவிட்டர் பக்கம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த டுவிட்டர் பக்கத்தை கொரோனாவால் பாதித்தவர்களும் பாதிக்காதவர்களும் பயன்படுத்தி தங்களது கேள்விகளை கேட்டு உடனுக்குடன் பதிலை பெறலாம் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது