நாட்டின் பாதுகாப்பில் டுவிட்டர் நிறுவனத்திற்கு கவலையில்லை- மத்திய அரசு
டுவிட்டர் நிறுவனம் நாட்டின் சட்டதிட்டங்களை மதிப்பதில்லை என்று மத்திய அரசு கர் நாடக உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு சமீபத்தில், அரசியல் சார்ந்த பதிவுகளை நீக்கும்படி எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஆனால், பதிவிட்ட நபருக்கு அரசு தரப்பில் நோட்டீஸ் அனுப்பவில்லை. இந்த நடவடிக்கைகள் பேச்சு சுதந்திரத்தை முழுமையாகப் பாதிக்கும் என தெரிவித்தது.
இதையடுத்து மத்திய அரசுக்குப் பதில் அளிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நநிலையில், மத்திய அரசு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை பதில் மனுதாக்கல் செய்திருந்தது.
அதில், டுவிட்டர் நிறுவனம் நாட்டின் சட்ட திட்டங்களை மதிப்பவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளது.