வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 3 செப்டம்பர் 2020 (08:23 IST)

கடைசியில மோடி தலையிலேயே கைய வச்சிடாங்க... ட்விட்டர் கணக்கு காலி!

பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கை ஹேக்கர்கள் முடக்ககியுள்ளனர் என செய்தி வெளியாகியுள்ளது. 
 
பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட வலைத்தளத்துடன் இணைக்கப்பட்டுள்ள narendramodi_in என்ற ட்விட்டர் கணக்கு இன்று காலை ஹேக் செய்யப்பட்டுள்ளது. இந்த கணக்கை 2.5 மில்லியனுக்கு அதிகமானோர் பின்தொடர்ந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
இந்நிலையில் பிட்காயின் மூலம் பணம் செலுத்துபவர்கள் மோடியின் கணக்கை முடக்கியதை ட்விட்டர் உறுதிப்படுத்தியுள்ளது,. மேலும் ஹேக் செய்யப்பட்டு கோவிட்-19க்காக கிரிப்டோ கரன்சி மூலம் நிவாரணம் வழங்குக என பதிவு செய்யப்பட்ட ட்விட்டுகள் நீக்கப்பட்டுள்ளன. அதோடு இந்த ஹேக்கிங் வேலையை ஜான் விக் என்பவர் செய்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.