செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: திங்கள், 24 பிப்ரவரி 2020 (17:37 IST)

தாஜ்மஹாலை சுற்றிப் பார்க்கும் டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர்...

தாஜ்மஹாலை சுற்றிப் பார்க்கும் டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர்
இன்று (24 ஆம் தேதி)  குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு தனது குடும்பத்தினருடன் விமானத்தில் வந்திறங்கிய அதிபர் டிரம்ப், அங்குள்ள பட்டேல் மைதானத்தில் நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
 
அங்கு லட்சக்கணக்கான மக்கள் குழுமியுள்ள நிலையில், முதலில் பிரதமர் மோடி பேசினார். அதன்பிறகு டிரம்ப் பேச ஆரம்பித்தார்.
 
அதில், இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நட்பு நாடாக அமெரிக்கா விளங்கும். இந்தியர்களின் ஒற்றுமை உலகத்திற்கே எடுத்துக்காட்டாய் விளங்குகிறது என தெரிவித்தார். மேலும், இந்தியாவின் வளர்ச்சிக்கு நவீன ஆயுதங்கள் வழங்க தயாராக உள்ளோம்.
 
சிறப்பு வரவேற்பளித்த நண்பர் மோடிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மோடி குஜராத்தின் பெருமை மட்டுமல்ல , கடின உழைப்பு பக்திக்கு வாழும் உதாரணம் மோடி என
தெரிவித்தார்.
 
அதன்பிறகு டிரம்ப் தனது குடும்பத்தினருடன் உத்திரபிரதேசம் மாநிலம் ஆக்ரா நதிக்கரையில் உள்ள தாஜ்மஹாலைப் பார்க்க செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது, டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர் அங்குச் சென்றுள்ளனர்.
 
 
இதற்கிடையே, டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு டுவீட் ஹிந்தியில் பதிவிட்டுள்ளார். அதில், ‘ அமெரிக்காவும் இந்தியாவும் தங்கள் நாடுகளை வலுப்படுத்தும், தங்கள் மக்களை வளமாக்கும், பெரிய கனவு காண்பவர்களை பெரிதாக்குகின்றன, அவர்களின் எதிர்காலத்தை முன்பு இருந்தததையும் விட பிரகாசமாக்கும் ... இது ஒரு தொடக்கம் மட்டுமே எனப் பதிவிட்டுள்ளார்.
 
தற்போது தாஜ்மஹாலில்  உள்ள வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்ட டிரம்ப் அவரது மனைவி மெலனியா, மகள் இவாங்கா, மருமகன் ஜேரட் குஷ்னருடன் யனுமை நதிக்கரையில் உள்ள தாஜ்மஹாலை சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது, டிரம்ப் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அவர்களுக்கு சுற்றுலா வழிகாட்டி விளக்கினார்.
 
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் இந்திய சுற்றுப்பயணம் உலக நாடுகளிடையே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.