கொரோனோ வைரஸால்...உச்சம் தொட்ட தங்கத்தின் விலை !
சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.752 உயர்ந்து ரூ. 33, 228க்கு விற்பனை ஆகிறது. இதனால் மத்திய தர வர்க்கத்தினர், மற்றும் ஏழை எளிய மக்கள் இனிமேல் தங்கம் வாங்க முடியுமோ என்ற அச்சம் நிலவுகிறது.
கொரோனோ வைரஸால்...உச்சம் தொட்ட தங்கத்தின் விலை !
சமீக காலமாக, அமெரிக்கா, சீனாவுடனான வர்த்தகப் போர் காரணமாக உலக நாடுகளிடமே பதற்றம் அதிகரித்தது. அதேபோல் அமெரிக்கா இரானுக்கு இடையேயான போர் பதற்றம் நீடித்ததால் உலக நாடுகளிடையே கச்சா பொருட்களின் விலை அதிகரித்தது.
இந்த நிலையில் உலக முதலீட்டாளர்கள் கச்சா எண்ணெய் , அமெரிக்க டாலர்களில் முதலீடு செய்வதற்கு பதில், தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளதால், தங்கம் விலை சர்வதேச சந்தையில் அதிகரித்துள்ளது. எனவே தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.4100 ஆக உயர்ந்தது. இன்று மாலை மேலும் 66 ரூபாய் அதிகரித்து ரூ.4166 ஆக உயர்ந்தது. தங்கம் ஒரு சவரன் விலை தற்போது ரூ.33,328-க்கு விற்பனையாகிறது.