செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 24 பிப்ரவரி 2020 (15:47 IST)

இந்தியாவுல கோபேக்…. அமெரிக்காவுல டோண்ட் கம்பேக் – ட்ரம்புக்கு வந்த சோதனை !

ட்ர்ம்ப் இந்தியா வந்துள்ளதை அடுத்து அவரை கேலி செய்யும் பல மீம்ஸ்களும் கமெண்ட்களும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

அமெரிக்க அதிபட் டொனால்ட் ட்ரம்ப் இன்று மதியம் இந்தியா வருகிறார். இதற்கான ஆயத்த பணிகள் கடந்த சில வாரங்களாகவே தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்னும் இந்தியா வராத நிலையில் அதற்குள் சமூக வலைத்தளமான டிவிட்டரில் #GoBackTrump என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. 

ட்ரம்ப் இந்தியா வருவதே அமெரிக்காவில் உள்ள இந்தியர்களை ஈர்க்கதான் என்ற குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது. எதிர்வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் அமெரிக்கா வாழ் இந்தியர்களின் வாக்குகளை ஈர்க்க ட்ரம்ப் முயல்வதாக அமெரிக்க எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.

மேலும், டிரம்ப் வருகையை முன்னிட்டு குடிசைகளை மறைக்க சுவர் எழுப்பியதும், அவரை வரவேற்க 70 லட்சம் பேர் கூடுவார் என கூறியதும் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதால் இந்த ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது என தெரிகிறது. 

இந்தியாவில்தான் இந்த நிலைமை என்றால் அமெரிக்காவிலோ வேறு லெவலில் அவரைக் கலாய்த்துள்ளனர். ட்ரம்ப் இந்திய வருகையை முன்னிட்டு ‘நான் இந்தியாவுக்கு கிளம்பிவிட்டென்’ என டிவிட்டரில் சொல்ல, அதில் குறும்புக்காரர் ஒருவர் ‘தயவு செய்து திரும்பி வராதீர்கள்’ என கமெண்ட் செய்துள்ளார்.