திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 4 மார்ச் 2023 (18:46 IST)

அரியானாவில் பேருந்து மீது லாரி மோதி விபத்து ..7 பேர் பலி

Haryana
அம்பாலாவில் பேருந்து மீது டிரக் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில்,7  பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியானா மாநிலத்தில் முதல்வர் மனோகர் லால் கட்டா தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள அம்பாலாவில் பேருந்து மீது டிரக் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில்,7  பேர் பலியானதாக தகவல் வெளியாகிறது.

யமுனா நகர் – பஞ்ச்குலா நெடுஞ்சாலையில்  நேற்று பேருந்து  ஒன்று சென்று கொண்டிருக்கும்போது,  பின்னால் லோடு ஏற்றி வந்த லாரி அந்தப் பேருந்து மீது மோதி விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் லாரி கவிழ்ந்த நிலையில், 7 பேர் பலியாகியுள்ளனர். 4 பேர் காயமடைந்துள்ளனர்.

அருகில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். 

லாரி மற்றும் பேருந்து ஓட்டுனர்களுக்கு எந்தப் பாதிப்புமின்றி உயிர்தப்பினர். இதுகுறித்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.