திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 10 பிப்ரவரி 2022 (11:43 IST)

பிரதமருக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் - டி.ஆர்.எஸ். கட்சி அதிரடி!

பிரதமர் மோடிக்கு எதிராக மாநிலங்களவையில் டி.ஆர்.எஸ். கட்சி உரிமை மீறல் தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது. 

 
சமீபத்தில் பிரதமர் மோடி மாநிலங்களவையில், நாடாளுமன்றத்தின் கதவுகளை மூடிவிட்டு தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கியதாக பேசியிருந்தார். அதாவது தெலுங்கானா மாநிலம் முறையாக உருவாக்கப்படவில்லை என்பதனை அவர் குறிப்பிட்டதாக தெரிகிறது. 
 
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக மாநிலங்களவையில் டி.ஆர்.எஸ் கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் மோடி மாநிலங்களவையில் தெலங்கானா குறித்து பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து டி.ஆர்.எஸ் கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டுள்ளனர். 
 
மேலும் பிரதமர் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டி.ஆர்.எஸ். கட்சி எம்.பி.க்கள் பிரதமருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதோடு டி.ஆர்.எஸ். கட்சி உரிமை மீறல் தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது.