திரிபுரா முதலமைச்சர் திடீர் ராஜினாமா
திரிபுரா முதலமைச்சர் திடீர் ராஜினாமா
திரிபுரா மாநிலத்தின் முதல்வர் பிப்லப் குமார் தேவ் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
முதலமைச்சர் பிப்லப் குமார் தேவ் சற்றுமுன்னர் திரிபுரா ஆளுநரிடம் தனது பதவி விலகல் கடிதத்தை வழங்கியுள்ளார். அந்த கடிதத்தை ஆளூனரிடம் ஏற்று கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து புதிய முதல்வர் யார் என்பது இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
கடந்து 2018 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 36 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. எதிர்க்கட்சியான கம்யூனிஸ்ட் 16 இடங்களை மட்டுமே பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் அடுத்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில் முன்கூட்டியே தேர்தல் வர வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது