அக்டோபரில் ஏமாற்றிய மழை.. நவம்பரில் வெளுத்து கட்டுமா? வானிலை ஆய்வு மையம்..!
அக்டோபர் மாதம் மழை ஏமாற்றிய நிலையில் நவம்பர் மாதம் சராசரியாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அக்டோபர் மாதம் இயல்பை விட 43 சதவீதம் மழை குறைவாக பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் நவம்பர் மாதம் மழை குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.
நவம்பர் மாதம் மழைப்பொழிவு சராசரி அளவை ஒட்டியிருக்கும் என்றும் குறிப்பாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் உள்ள சில மாவட்டங்களில் சுமாரான மழையே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்னிந்தியாவின் ஒரு சில பகுதிகளில், வடமேற்கு இந்தியா, கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில், மத்திய கிழக்கு இந்தியாவில், வழக்கத்தை விட மழை அதிகம் பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Edited by Siva