1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (07:59 IST)

மகளிர் மசோதாவுடன் முடிந்தது நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்..இன்று கிடையாது..!

New Parliament
நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் ஐந்து நாள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று கூட்டம் கிடையாது என்றும் நேற்றுடன் கூட்டத்தொடர் முடிவடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஐந்து நாள் அறிவிக்கப்பட்ட நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் இன்று கிடையாது என்றும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தினர் ஒரு நாளுக்கு முன்பே முடிந்து கொள்ளப்பட்டது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 ராஜ்யசபா மற்றும் லோக்சபா ஆகிய இரண்டு சபாக்களும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஒரே நாடு ஒரே தேர்தல் உட்பட ஒரு சில மசோதாக்கள் இந்த சிறப்பு கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று கூறப்பட்ட நிலையில் மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா மட்டுமே நிறைவேறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva