1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 19 ஏப்ரல் 2021 (08:31 IST)

கொரோனா வார்ட்டாகும் ரயில் பெட்டிகள் - முன்வந்தது ரயில்வே!!

டெல்லியில் கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்த டெல்லி அரசுக்கு 75 பெட்டிகளை வழங்க ரயில்வேத்துறை முடிவு செய்துள்ளது. 

 
இந்தியா முழுவதும் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் டெல்லியில் தினசரி கொரோனா பாதிப்பு பல ஆயிரத்தை தாண்டியது. இதனைத்தொடர்ந்து டெல்லியில் ஊரடங்கு அமல்படுத்துவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்து, இரவு 10 மணிக்கு தொடங்கி திங்கள் காலை 6 மணி வரைக்கும் டெல்லியில் முழு ஊரடங்கு போடப்பட்டது. மேலும் ஒவ்வொரு வார இறுதியிலும் இந்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் டெல்லியில் படுக்கையில் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்த டெல்லி அரசுக்கு 75 பெட்டிகளை வழங்க ரயில்வேத்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, ஆனந்த விஹாரி மற்றும் சகுர் பாஸ்தி ஆகிய ரயில் நிலையங்களில் இந்த பெட்டிகள் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதில் லேசான அறிகுறிகளுடன் உள்ள 800 பேரை பராமரிக்கும் வகையில் 50 பெட்டிகளும் சகுர் பாஸ்தி நிலையத்தில் , 400 நோயாளிகளுன் 25 பாராமரிப்பாளர்களுடன் ஆனந்த விஹாரி நிலையத்தில் நிறுத்தப்படும் என தகவல்.