உத்திரபிரதேசத்தில் பயங்கரம்: ரயில் தடம் புரண்டு விபத்து

train
Last Modified புதன், 10 அக்டோபர் 2018 (07:37 IST)
உத்திரபிரதேசத்தில் ரயில் தட புரண்டு ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசம் ஹர்சந்த்பூர் ரயில் நிலையத்தில் இருந்து 50 மீட்டர் தூர தொலைவில் நியூ ஃபராக்கா விரைவு ரயிலின் 6 பெட்டிகள் திடீரென தடம் புரண்டது. இதனால் ரயிலில் இருந்த பயணிகள் அதிர்ச்சியில் அலறினர். இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலே பலியாகினர். பலர் படைகாயமடைந்தனர்.
 
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புத் துறையினர், படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் உ.பியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :