வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 30 நவம்பர் 2021 (10:18 IST)

ஜியோ கட்டண உயர்வை ஓராண்டுக்கு தள்ளிவைக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்களை அடுத்து ஜியோ நிறுவனமும் ப்ரீபெய்டு கட்டணத்தை உயர்த்தியது என்பதும் கட்டண உயர்வு நாளை முதல் அதாவது டிசம்பர் 1 முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
ஆனால் அதே நேரத்தில் கட்டண உயர்வுக்கு மூன்று ரீசார்ஜ் செய்யப்படும் அனைவருக்கும் முந்தைய கட்டணத்தின் சலுகைகள் வழங்கப்படும் என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது
 
இதனை அடுத்து இன்று ஒரு ஆண்டுக்கு ரீசார்ஜ் செய்தால் பழைய கட்டண முறையிலேயே இன்னும் ஒரு ஆண்டுக்கு புதிய கட்டண உயர்வை தவிர்த்து விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் மூன்று மாதங்கள், ஆறு மாதங்கள், ஒரு மாதம் என எந்த பிளானையும் இன்று ரீசார்ஜ் செய்தால் அந்த பிளான் முடியும் வரை பழைய கட்டண முறை வாடிக்கையாளருக்கு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது