வாழை மட்டையோடு கட்டி பசுக்கள் கடத்தல் : அதிர்ச்சி தகவல்

west bengal
Last Updated: வெள்ளி, 19 ஜூலை 2019 (14:44 IST)
இந்தியாவில் பசுக்கள் புனிதமாகவும்,கடவுளாகவும் பார்க்கப்படுகிறது.  இந்நிலையில் இந்தியாவில் இருந்து வங்கதேசத்துக்கு வருடம்தோறும் பல்லாயிரக்கணக்கான பசுக்கள் சட்டவிரோதமாகக் கடத்தப்படுவதாகத் தகவல்கள் வெளியான நிலையில், இதை எல்லைப் பாதுகாப்புப் படையினர் தற்பொது தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று நம் இந்திய எல்லையாக மேற்குவங்கம் - வங்கதேசத்துக்கு இடையில் ஓடும் பத்மா என்ற ஆற்றில் இருந்து 261க்கும் மேற்பட்ட பசுக்களை வாழை மட்டையில் வைத்து கட்டி ஆற்றின் வழியே வங்கதேசத்துக்கு கடத்த முயன்ற மூன்று பேரை எல்லை பாதுகாப்புப் படைவீரர்கள் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
west bengal
மேலும் இந்த சட்டவிரோதமாக ‘பசு கடத்தல் ’பெரும்பாலும் இரவு வேளைகளில் தான் நடப்பதாகவும், சில கும்பல் இதையே தொழிலாகக் கொண்டு வருமானம் ஈட்டி வருவதாகவும், தெரிகிறது. இதில் முக்கியமாக ஆண்டுதோறும் பக்ரீத் பண்டிகையை ஒட்டி வங்கதேசத்தில் அதிகளவு கால்நடைகள் தேவை இருப்பதால்... தற்போது இந்த கால்நடைகள் கடத்தல் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது.  இதைத்தடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 


இதில் மேலும் படிக்கவும் :