செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 22 ஏப்ரல் 2020 (15:17 IST)

அரை மணி நேரத்தில் 60 ஆயிரம் ட்வீட்: பட்டையை கிளப்பும் விஜய் ரசிகர்கள்!

கொரோனா பாதிப்புகளுக்கு நடிகர் விஜய் நிதியளித்ததை தொடர்ந்து விஜய் குறித்த ஹேஷ்டேகுகள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

நாடு முழுவதும் கொரோனா வைரஸால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மக்கள் அன்றாட வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் மக்களுக்கு உதவுவதற்காக பல்வேறு அரசியல் மற்றும் திரை பிரபலங்களும் நிதியுதவி செய்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய் கொரோனா நிதியுதவியாக ரூ.1.30 கோடி நிதியுதவி அறிவித்துள்ளார்.

பிரதமரின் நிவாரண நிதி கணக்கிற்கும், 6 மாநிலங்களுக்கும் நடிகர் விஜய் நிதியளித்தது குறித்து அவரது ரசிகர்கள் ட்விட்டரில் #RealHeroThalapathyVIJAY என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். கடந்த அரை மணி நேரத்திற்குள் 60 ஆயிரத்திற்கும் மேலாக ஹேஷ்டேக் பகிரப்பட்டு ட்ரெண்டிங் ஆகியுள்ளது.