செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 31 ஜூலை 2021 (17:21 IST)

டோக்கியோ ஒலிம்பிக்; இந்திய வீராங்கனை தோல்வி!

இன்று நடைபெற்ற ஒலிம்பிக் பேட்மிண்டன் அரையிறுதி ஆட்டத்தில்  இந்திய வீராங்கனை பிவி.சிந்து தோல்வி அடைந்தார்.

ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக்-2020 போட்டிகள் நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் இந்தியாவைச் சேர்ந்த மீரா சானு என்பவர் பளுதூக்குவதலில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதித்தார்.

இந்நிலையில், இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பிவி.சிந்து மகளிர் ஒற்றையர் பிரிவில் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தார்.

இன்று நடைபெற்ற ஒலிம்பிக் பேட்மிண்டன் அரையிறுதி ஆட்டத்தில்  இந்திய வீராங்கனை பிவி.சிந்து தோல்வி அடைந்தார்.

சீன வீராங்கனை தை -சுயிங்கிடம் 21-12,21-12 என்ற கணக்கில் சிந்து அதிர்சித் தோல்வி அடைந்தார். இந்நிலையில் வெண்கலப் பதற்கத்திற்கான போட்டியில் சக வீராங்கனை ஹி பிங்ஜியாவோவை சிந்து எதிர்கொள்ள உள்ளார். அவர் வெல்ல வேண்டுமென இந்திய ரசிகர்கள்  பிரார்த்தனை செய்து வருகின்றனர்.