டோக்கியோ ஒலிம்பிக்ஸ்; குத்துச்சண்டையில் மேரிகோம் வெற்றி!
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டி பரபரப்பாக நடந்து வரும் நிலையில் இந்திய வீராங்கனை மேரிகோம் குத்துச்சண்டையில் வெற்றி பெற்றுள்ளார்.
கொரோனா பிரச்சினைகளுக்கு இடையிலும் திட்டமிட்டபடி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியுள்ளன. இதற்காக உலகம் முழுவதிலுமிருந்து பல ஆயிரம் வீரர்கள் ஜப்பான் சென்றுள்ள நிலையில் இந்தியாவிலிருந்து நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்
இந்நிலையில் டோக்கியோவில் நடந்து வரும் பல்வேறு போட்டிகளில் மகளிர் குத்துச்சண்டை போட்டியில் பிரபல இந்திய வீராங்கனை மேரி கோம் கலந்து கொண்டுள்ளார். முதல் சுற்றில் டொமினிக் நாட்டு வீராங்கனையை எதிர்கொண்ட மேரிகோம் அதில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.