1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 11 பிப்ரவரி 2020 (07:11 IST)

டெல்லியில் ‘தர்பார்’ செய்யப்போவது யார்? காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை!

டெல்லியில் ‘தர்பார்’ செய்யப்போவது யார்?
டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 8ஆம் தேதி நடைபெற்ற நிலையில் அந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் எண்ணப்படுகிறது. 
 
கடந்த 8ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் 62.59 % மக்கள் வாக்ளித்தனர். 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு பதிவானதாக வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. டெல்லியில் எந்த கட்சி ஆட்சியமைக்கும் என்பது வாக்கு எண்ணிக்கை தொடங்கிய ஒருசில மணி நேரங்களில் முன்னிலை நிலவரத்தை வைத்து தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
பாஜக, காங்கிஸ் மற்றும் ஆம் ஆத்மி என மும்முனை போட்டி உள்ள டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என்றும் பாஜக 10க்கும் குறைந்த அளவிலான இடங்களை கைப்பற்ற வாய்ப்புள்ளதாகவும் பல்வேறு கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.  ஆளும் ஆம் ஆத்மி கட்சி அதிக அளவில் இடங்களை பிடித்து மீண்டும் ஆட்சியை தக்க வைத்து கொள்ளும் என பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
கடந்த 2015ம் ஆண்டு தேர்தலின் போது, மொத்தம் உள்ள 70 இடங்களில் ஆம்ஆத்மி கட்சி 67 இடங்களை பிடித்து ஆட்சிக்கு வந்தது குறிப்பிடத்தக்கது இந்த தேர்தலிலும் 60க்கும் மேற்பட்ட இடங்களை அந்த கட்சி கைப்பற்ற வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆம் ஆத்மி கட்சிக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்தது பிரசாந்த் கிஷோர் என்பது குறிப்பிடத்தக்கது.