புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : சனி, 8 பிப்ரவரி 2020 (14:25 IST)

பெண் வேட்பாளர் குறித்து விமர்சனம்... தொண்டரை அறைந்த பெண் வேட்பாளர் !

ஆம் ஆத்மி தொண்டரை தாக்க முயன்ற காங்., பெண் வேட்பாளர்
டெல்லி சாந்தினி சவுக் வாக்குச் சாவடி மையத்தில், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ஒரு தொண்டர், காங்கிரஸ் பெண் வேட்பாளரை அறைய செய்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
டெல்லியில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. மக்கள் பலரும் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். 
 
இந்நிலையில், சாந்தினி சவுக் வாக்குச் சாவடி மையத்தில் காங்கிரஸ் பெண் வேட்பாளர் அல்கா லம்பா  என்பவரை ஆம் ஆத்மி தொண்டர் ஒருவர் அறைய முயன்றார். அப்போது, கோபமடைந்த  அல்கா, அவரை அறைய முயன்றார். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அந்த நபரை போலீஸார் அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.