வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : வெள்ளி, 4 மார்ச் 2022 (15:35 IST)

இந்திய பங்குச்சந்தை மீண்டும் 700 புள்ளிகள் சரிவு: முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

உக்ரைன் போர் விவகாரம் காரணமாக இந்திய பங்குச் சந்தை மீண்டும் சரிந்ததால் முதலீட்டாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சரிவில் இருந்தது என்பதும் சற்று முன் 770 புள்ளிகளுக்கு மேல் சரிவடைந்து 54338 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அதேபோல் நிஃப்டி 250 புள்ளிகள் வரை குறைந்தது 16 ஆயிரத்து 240 என விற்பனையாகி வருகிறது. ஏற்கனவே கடந்த இரண்டு மாதங்களில் சென்செக்ஸ் சுமார் 8000 புள்ளிகள் குறைந்துள்ள நிலையில் தற்போது மீண்டும் குறைந்துள்ளதால் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
இருப்பினும் உக்ரைன் போர் முடிவுக்கு வந்த பிறகு மீண்டும் பங்குச்சந்தை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது