1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. today maharstra corona virus status,

தமிழகத்தில் குறையாத கொரோனா மகாராஷ்டிரா குறைவது எப்படி?

கொரோனா
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தினந்தோறும் 33 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை 60 ஆயிரத்திற்கும் மேல் கொரோனா பாதிப்பு இருந்த மகாராஷ்டிர மாநிலம் தற்போது 30 ஆயிரத்திற்கும் குறைந்து உள்ளது என்பது மிகப் பெரிய ஆச்சரியமான விஷயமாக பார்க்கப்பட்டு வருகிறது
 
இந்தியாவிலேயே கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் என்று கருதப்பட்ட மகாராஷ்ட்ராவில் ஊரடங்கு உள்பட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுப்பதன் காரணமாக தற்போது வெகுவாக குறைந்துள்ளது 
 
மும்பை உள்பட அனைத்து முக்கிய நகரங்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது அனைவருக்கும் நிம்மதியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய மகாராஷ்டிரா வைரஸ் பாதிப்பு நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்
 
இன்றைய கொரோனா பாதிப்பு: 28,438 
 
இன்று குணமானோர் எண்ணிக்கை: 52,898 
 
இன்று பலியானோர் எண்ணிக்கை: 679 
 
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை: 54,33,506
 
கொரோனாவில் இருந்து குணமானோர் மொத்த எண்ணிக்கை: 49,27,480
 
கொரோனாவால் பலியானோர் மொத்த எண்ணிக்கை:  83,777
 
ஆக்டிவ் கேஸ்கள்: 4,19,727
 
 
About Writer
siva