1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 18 மே 2021 (16:16 IST)

அன்புமணி ராமதாஸ் கொரோனா தடுப்பு நிதியுதவி

கொரோனா தடுப்புப் பணிகளுக்காக அன்புமணி ராமதாஸ் நிதியுதவி செய்துள்ளார்.

உலகில் கொரொனா இரண்டாம் கட்ட அலைபரவிவரும் நிலையில் இந்தியாவில் இது கோர தாண்டவம் ஆடிவருகிறது.  எனவே மத்திய் அரசு மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

தமிழகத்தில் நாளொன்றுக்கு சுமார் 30 ஆயிரம் மக்கள் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் நேற்றுமுதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ –பாஸ் கட்டாயம் என நடைமுறைப்படுத்தப்பட்டதால் மக்கள் நடமாட்டம் ஓரளவு குறைந்தது. இருப்பினும் திருமணம் என்ற காரணத்தைக் கூறி நிறையப்பேர் வெளியே சுற்றுவதால் இ-பாஸில் திருமணத்தை நிறுத்திவைத்துள்ளது அரசு.

இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சரும் தருமபுரி பாராளுமன்ற தொகுதி எம்பியுமான அன்புமணி ராமதாஸ் கொரொனா தடுப்புப் பணிகளுக்காக தனது ஒரு மாத ஊதியத்தை வழங்கியுள்ளார்.

நேற்று எம்பியும் நடிகருமான  விஜய் வசந்த் ரூ.25 லட்சம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.